ஒன்பது மாதங்களின் பின்னர் விமான நிலையங்கள் திறப்பு

இலங்கையில் ஒன்பது மாதங்களின் பின்னர் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் இன்று (21/01) சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காகத் திறக்கப்பட்டன.

இலங்கையின் சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்குடனேயே கட்டுநாயக்கா விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ச விமான நிலையங்கள் இன்று திறக்கப்பட்டன. இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளிற்கு இணையம் மூலமாக மட்டுமே விசா வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் தவிர்ந்து இலங்கை வதிவிட விசா உடையவர்கள், இரட்டைகுடியுரிமை உள்ளச்வர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோரும் இலங்கை வரமுடியுமென விமான போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கை வரும் அனைத்து பயணிகளும் கொரோனா பரிசோதனை (PCR) மேற்கொண்டு தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருத்தல் வேண்டும். அத்துடன் 50.000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கோவிட்-19 காப்புறுதியையும் கொண்டிருத்தல் வேண்டும்.

மேலும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான நட்சத்திர விடுதிகளில் மட்டுமே தங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலமானவை