இலங்கையில் சமூக தொற்றாக மாறும் கொரோனா, ஒரே நாளில் 865 தொற்றாளர்கள்

மஹிந்த அரசின் பெரும் செல்வாக்கைப் பெற்ற பிராண்டிக்ஸ் ஆடை உற்பத்தி நிறுவனம், கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமையினால், இந்தியாவிலிருந்து கொரோனா தொற்று இலங்கைக்குள் பரவியுள்ளது.

கம்பஹாவில் ஆரம்பித்த தொற்று, இன்று நாடு முழுவதும் பரவி சமூகத் தொற்றாக உருவெடுத்துள்ளதாக இலங்கை அரச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (23/10) மட்டும் 865 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இதில் 535 தொற்றாளர்கள் பேலியகொடை மீன் சந்தை கொத்தனியுடன் தொடர்புபட்டவர்களாவர். மேலும் 217பேர் மேற்குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களாவர். 48பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையுடனும், 20பேர் பேருவளை மீன்பிடித் துறைமுகத்துடனும் தொடர்புபட்டவர்களாகும்.

பேலியகொட மீன் சந்தை கொத்தனி தொற்றினால், கொழும்பில் மருதானை, தெமட்டகொடை, மட்டகுளி, கொட்டாஞ்சேனை, மோதர, புளூமெண்டல் மற்றும் கிராண்ட்பாஸ் போன்ற பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை இலங்கையில் 7,153பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில் 3,644பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

பிரபலமானவை