டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றது

இன்று (12/06) சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க – வட கொரியா அதிபர்களின் சந்திப்பு சுமூகமாக முடிவுற்றுள்ளது.

இரு நாட்டு தலைவர்களும், அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள உறவை மேலும் பலப்படுத்தவும் மற்றும் கொரிய தீபகற்பத்தில் நிலையான அமைதியை உருவாக்குவது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

 

இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய விடயங்களாவன,

  • அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளும், இரு நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக புதிய உறவுகளை தொடங்கும்.
  • கொரிய தீபகற்பத்தில் அமைதியான மற்றும் நிலையான ஆட்சி அமைய இரு நாடுகளும் இணைந்து முயற்சிகளை எடுக்கும்.
  • ஏப்ரல் 27, 2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பன்முன்ஜம் பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக்க கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஒப்புக்கொண்டுள்ளது.
  • அடையாளம் காணப்பட்டுள்ள போர் கைதிகளை மீட்டு, உடனடியாக அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன

Latest articles

Similar articles