ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறும் ஷெல் நிறுவனம்

பன்னாட்டு எரிபொருள் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் நிறுவனம் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்கிறது.

உலக எரிபொருள் சமநிலையை கணக்கிலெடுக்காது, மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்திருந்தன. இதனால் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியிருந்தன.

ரஷ்யாவிற்கு பதிலாக எரிபொருளை வழங்கும் நாடுகளின் வழங்கல்கள் இன்னும் கிடைக்கப் பெறாமையால், ஐரோப்பாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்காக, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஷெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக எரிபொருள் வழங்கலில் ரஷ்யா 8% வழங்கலை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Latest articles

Similar articles