ரஷ்ய ரூபிளின் பெறுமதி 30 வீதத்தினால் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிராக ரஷ்ய ரூபிளின் பெறுமதி 30% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது.

உக்ரைனின் மீதான படையெடுப்பின் பின்னர், மேற்குலக நாடுகள் பல ரஷ்யாவிற்கெதிராக பல பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியிருந்தன. மேலும் ரஷ்யாவின் பல வங்கிகள் சுவிவ்ட் (Swift) சர்வதேச பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக ரஷ்ய பணத்தின் பெறுமதி வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

ரஷ்யாவின் பல வங்கிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் நேச நாடுகள் மேற்கொண்ட சுவிவ்ட் (Swift) சர்வதேச பரிவர்த்தனை தடையானது, இதுநாள் வரையில் ரஷ்யாவிற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட தடைகளில் கடினமானதும் மிகப்பெரிய தடையுமாகும்.

Latest articles

Similar articles