76% வாக்குகளைப் பெற்று மீண்டும் ரஷ்ய அதிபரானார் விளாமிடிர் புடின்

கடந்த ஞாயிறு (18/03) ரஷ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 76% இற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று, மீண்டும் ரஷ்யாவின் அதிபரானார் விளாமிடிர் புடின். வரும் ஆறு வருடங்களுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதியாக புடின் பதவி வகிப்பார்.

பிரதான எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவல்னி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு புடின் அரசாங்கம் தடை விதித்திருந்தமையும், பல இடங்களில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகளுமே புடினின் இந்த பெரும் வெற்றிக்கு காரணம் என பல ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

1999ம் ஆண்டிலிருந்து ரஷ்யாவை ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ புடின் ஆண்வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புடினின் வெற்றிக்கு மேற்குலக நாட்டு தலைவர்களைத் தவிர ஏனைய நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Latest articles

Similar articles