வரும் ஓரிரு மாதங்கள் மிகவும் கடினமான மாதங்களாக அமையும் – ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(16/05) நாட்டு மக்களுக்கு வழங்கிய விஷேட உரையில், வரும் ஓரிரு மாதங்கள் நம் வாழ்நாளில் மிகவும் கடினமான மாதங்களாக இருக்கும் எனத் தெரிவுத்துள்ளார்.

இலங்கை திறைசேரியில் பணம் முற்றாக நிறைவடைந்துள்ளதால் எரிபொருள், எரிவாயு மற்றும் மருத்துவப் பொருட்களுக்குரிய பணத்தை செலுத்த முடியாமல் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் நேச நாடுகள் பண உதவி செய்ய முன்வந்துள்ளதால், ஓரிரு மாதங்களில் எரிபொருள், எரிவாயு மற்றும் மருத்துவப் பொருட்களுக்களின் தட்டுப்பாடுகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குவதற்காகவும், அத்தியாவசிய பொருட்களின் கொள்வனவிற்காகவும் பணத்தை அச்சடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைய சாத்தியமுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் நஷ்டத்தில் இயங்கும் ஶ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்தும்படியும் முன்மொழிந்துள்ளார்.

Latest articles

Similar articles