ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி​ ​மியான்மார் வரத் தடை

மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள்​ மற்றும்​ ​​மனித உரிமைகள்​ மீறல்கள்​ குறித்து ஆய்வு நடத்​த வரவிருந்த ​ ​ஐ.நாவின் மனித உரிமை ​விசாரணை அதிகாரி​யின் விஜயத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.​

ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி​ ​​யாங்ஹீ லீ​​ தனது பணிகளில் நடுநிலமையுடன் செயற்படாததனால் ​அவர் மியான்மருக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக மியான்மார் அரசு கூறியுள்ளது.​

​இதுபற்றி ​யாங்ஹீ லீ​ குறிப்பிடும்போது, மியான்மாரில் ​​மனித உரிமைகள்​ மீறல்கள்​ இடம்பெறுகிறது என்பதனையே எனக்கு வித்த்க்கப்பட்டுள்ள பயணத் தடை எடுத்துக்காட்டுகிறது எனத் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமையன்று, ​மியான்மாரில் ஒரு கிராமத்தில் உள்ள புதைகுழியில் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக மியான்மார் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

(நன்றி : அல் ஜஸீரா)

Latest articles

Similar articles