கோத்தபாய ராஜபக்சவின் விசுவாசியும், போர்க்குற்றவாளியாகவும் கருதப்படும் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை இலங்கையின் இராணுவத்தளபதியாக மைத்ரிபால சிறிசேனா நியமித்தமை சரியானதே என நியாயப்படுத்தி இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மேற்கத்தேய நாடுகள் கண்டனம் தெரிவித்தும், கவலையை வெளிப்படுத்தியும் அறிக்கைகைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும்போது, இலங்கை தனது செயலை நியாயப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இறுதிப்போரில் தமிழர்களை காக்கத்தவறிய இலங்கையின் அயல் நாடான இந்தியா, இராணுவத்தளபதியின் நியமனம் தொடர்பாகக் காத்துவரும் மௌனம், இலங்கைக்கு இன்னும் பலம் சேர்ப்பதாகவே உள்ளது.
