போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக்கிய ஜனாதிபதி. அமெரிக்கா கடும் அதிருப்தி

உலகமே போர்க்குற்றவாளியாகக் கருதும் சவேந்திர சில்வாவை இலங்கையின் 23வது இராணுவத்தளபதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா நியமிதித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் மிக நெருங்கிய சகாவான சவேந்திர சில்வா, 2009 ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின்போது கோத்தபாயவின் நேரடி கட்டளையில் செயற்பட்டு, பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சவேந்திர சில்வாவின் நியமனத்தை அமேரிக்கா நேரடியாகவே விமர்சித்துள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், கீழ்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா மிகுந்த கவலையடைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினாலும், ஏனைய அமைப்புக்களாலும் சவேந்திர சில்வாவிற்கு எதிராக ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பாராதூரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்தவையுமாகும்.
சவேந்திர சில்வாவின் நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பைப் பாதிக்கும் அதேவேளை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்கும் வகையில் அமைந்துள்ளது.
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

Similar articles