கடந்த மாதம் 9ம் திகதி அலரி மாளிகை மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், மகிந்தவின் கைக்கூலியுமான ஜொன்ஸ்ரன் பெர்ன்னாண்டோவை தேடிக் கண்டுபிடிக்க இரண்டு காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ஜொன்ஸ்ரன் பெர்னாண்டோவை விரைவில் கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவோம் என இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் மே 9ம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இதுவரை 2,348பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் 1,037பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.