உதைபந்தாட்டம் : 18 வயது பிரிவில் புனித ஹென்றியரசர் கல்லூரி சாம்பியன்

பாடசாலைகளுக்கிடையேயான தேசிய உதைபந்தாட்டப் போட்டியில், யாழ் இளவாளை புனித ஹென்றியரசர் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் கொழும்பு ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியை எதிர்கொண்ட புனித ஹென்றியரசர் கல்லூரி, இறுதிவரை மிகவும் சிறப்பாக விளையாடி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தேசிய சாம்பியன் ஆனது.