FIFA உலக கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட அணி, பெரு நாட்டை வென்று உலக கிண்ண போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
பெனால்டி முறையில் 5 : 4 என்ற கோல் என்ற விகிதத்தில் ஆஸ்திரேலிய அணி பலம்வாய்ந்த பெரு அணியை வென்றுள்ளது. இறுதிவரை சிறப்பாக விளையாடிய இரு அணிகளும் 90 நிமிட முடிவில் எவ்வித கோல்களையும் பெற்றிருக்கவில்லை.
இதனால் மேலதிகமாக வழங்கப்பட்ட 30 நிமிட நேரத்திலும் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெற்றிருக்கவில்லை. இறுதியில் பெனால்டி முறையில் ஆஸ்திரேலியா அணி 5 : 4 என்ற கோல் என்ற விகிதத்தில் வெற்றிபெற்றது.
இவ்வருடம் நவம்பர் மாதம் கட்டார் நாட்டில் நடைபெறவுள்ள FIFA உலககிண்ண கால்பந்து போட்டிகளில், ஆஸ்திரேலிய அணி மிகவும் பலம் வாய்ந்த (f)பிரான்ஸ், டென்மார்க் மற்றும் துனிஸியா போன்ற அணிகள் உள்ள குழுவில் இடம்பெற்றுள்ளது.