இலங்கையின் பிரபல தமிழ் கால்பந்தாட்ட வீரர் டக்சன் புஸ்லாஸ் மர்மமான முறையில் மாலைதீவில் உயிரிழந்துள்ளார். அவர் தங்கியிருந்த அறையில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி டக்சன் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றபோதும், அவரின் மரணத்தில் பாரிய சந்தேகம் நிலவுகின்றது. மாலைதீவு காவல்துறையினர் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட டக்சன், TC Sports Club மற்றும் மாலைதீவின் வலென்ஸியா கழகத்திற்காக விளையாடும் ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரர் ஆவார்.
முப்பது வருட உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் விளையாடுத் திறமையை இன்னும் மழுங்கடிக்க ஏதோ ஒரு சக்தி திரை மறைவில் செயற்படுவது என்பது மட்டும் திண்ணம்.