சகல கால்பந்து போட்டிகளிலிருந்தும் ரஷ்யா இடைநிறுத்தம்

சகல கால்பந்து போட்டிகளிலிருந்தும் ரஷ்ய நாட்டு தேசிய கால்பந்து அணிகள் மற்றும் அந்நாட்டின் கால்பந்து விளையாட்டுக் கழகங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக FIFA மற்றும் UEFA கூட்டாக அறிவித்துள்ளன.

உக்ரைன் நாட்டின் மீதான ஆக்கிரமிப்பையடுத்து இந்த தடையை FIFA மற்றும் UEFA விதித்துள்ளன. இதன் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தெரிவுப் போட்டிகள் மற்றும் மகளிருக்கான EURO 2022 போட்டிகளில் ரஷ்யா நாட்டு அணிகள் பங்குபெற்ற முடியாத நிலை ஏற்படும்.

Latest articles

Similar articles