இன்று 21.02.2018 நடைபெற்று முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கான கடைசி பதினாறு அணிகளுக்கிடையேயான நொக் அவுட் கால்பந்தாட்ட முதற் சுற்று போட்டி முடிவுகள்.
மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) vs செவியா (Sevilla)
இன்று இந்த அணிகளுக்கிடையே ஸ்பெயினில் நடைபெற்ற போட்டி கோல்கள் எதுவும் பெறாமல் சமநிலையில் முடிவுற்றது.
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கோல் காப்பாளர் டேவிட் டே கேயாவின் (David De Gea) பல சாமர்த்தியமான கோல் தடுப்புக்களால்தான் இந்த போட்டி முடிவு என்பது குறிப்பிடத்தக்கது. டேவிட் டே கேயாவை ஸ்பெயினின் ரியால் மாட்ரிட் அணி வாங்குவதற்கு சில காலமாக பகீரத பிரயத்தினம் மேற்கொள்வது நீங்கள் அறிந்ததே.
இந்த அணிகளுக்கிடையேயான இரண்டாம் சுற்று போட்டி மார்ச் பதின்மூன்றாம் திகதி மான்செஸ்டர் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நடைபெறும்.
ஷாக்ட்டார் டோனிஸ்ட்க் ( (Shakhtar Donetsk) vs ரோமா (Roma)
உக்ரேய்ன் நாட்டில் நடைபெற்ற மற்றைய போட்டியில் இத்தாலியின் ரோமா அணியை உக்ரேனின் ஷாக்ட்டார் டோனிஸ்ட்க் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று வலுவான நிலையில் உள்ளது.
ஷாக்ட்டார் டோனிஸ்ட்க் அணி சார்பாக பிரெட் (Fred) மற்றும் ப்ரைரா (Facundo Ferreyra) தலா ஒரு கோலை போட்டனர். ரோமா அணி சார்பாக உண்டெர் (Cengiz Under) ஒரு கோலை போட்டார்.
இந்த அணிகளுக்கிடையேயான இரண்டாம் சுற்று போட்டிகள் இத்தாலியில் மார்ச் பதின்மூன்றாம் திகதி நடைபெறும்.