செல்சி (Chelsea) vs பார்சிலோனா (Barcelona)

20.02.2018 நடைபெற்று முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணத்திற்க்கான கடைசி பதினாறு அணிகளுக்கிடையேயான நொக் அவுட் கால்பந்தாட்ட மற்றுமொரு முதற் சுற்று போட்டி முடிவுகள்:

செல்சி (Chelsea) vs பார்சிலோனா (Barcelona)

லண்டன் ஸ்டாம்போர்ட மைதானத்தில் நடைபெற்ற மிக விறுவிறுப்பான போட்டி சமநிலையில் முடிவுற்றது.

செல்சி அணி சார்பாக வில்லியான் ஒரு கோலையும், பார்சிலோனா சார்பாக லயனல் மெஸ்ஸி ஒரு கோலையும் போட்டனர். லயனல் மெஸ்ஸி, செல்சி அணிக்கெதிராக அடித்த முதலாவது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Embed from Getty Images

இந்த அணிகளுக்கிடையேயான இரண்டாம் சுற்று போட்டி மார்ச் பதினான்காம் திகதி பார்சிலோனா மைதானத்தில் நடைபெறும்.


பேயர்ன் மியூனிக் (Bayern Munich) vs பேசிடாஸ் ( Besiktas)

ஜெர்மனி அலியான்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மற்றைய ஒரு போட்டியில், ஜெர்மனியின் பேயர்ன் மியூனிக் அணி துருக்கியின் பேசிடாஸ் அணியை மிக இலகுவாக 5 – 0 என்ற கோல் கணக்கில் வென்று மிகவும் வலுவான நிலையில் உள்ளது.

மியூனிக் அணி அணி சார்பாக தோமஸ் முல்லர் மற்றும் லெவண்டோவ்ஸ்கி தலா இரு கோல்களையும், கோமன் ஒரு கோலையும் போட்டனர்.

இந்த அணிகளுக்கிடையேயான இரண்டாம் சுற்று போட்டிகள் துருக்கியில் மார்ச் பதினான்காம் திகதி நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...