ரியால் மாட்ரிட், லிவர்பூல் அணிகள் வெற்றி

14.02.2018 நடைபெற்று முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணத்திற்க்கான கடைசி பதினாறு அணிகளுக்கிடையேயான நொக் அவுட் கால்பந்தாட்ட மற்றுமொரு முதற் சுற்று போட்டி முடிவுகள்:

பாரிஸ் (Paris) vs ரியல் மாட்ரிட் (Real Madrid)

ஸ்பெயின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை ஸ்பெயினின் ரியால் மாட்ரிட் அணி 3 – 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

Embed from Getty Images

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி சார்பாக ஏட்ரியன் ராபியட் ஒரு கோலையும், ரியால் மாட்ரிட் சார்பாக ரொனால்டோ இரு கோல்களையும் மற்றும் மார்சேல்லோ ஒரு கோலையும் போட்டனர்.

இந்த அணிகளுக்கிடையேயான இரண்டாம் சுற்று போட்டி மார்ச் ஆறாம் திகதி பாரிசில் நடைபெறும்.

போர்ட்டோ (Porto) vs லிவர்பூல் (Liverpool)

போர்த்துக்கலில் நடைபெற்ற மற்றைய ஒரு போட்டியில், போர்த்துக்கல்லின் போர்ட்டோ அணியை இலகுவாக இங்கிலாந்தின் லிவர்பூல் அணி 5 – 0 என்ற கோல் கணக்கில் வென்று மிகவும் வலுவான நிலையில் உள்ளது.

லிவர்பூல் அணி சார்பாக சாடியோ மானே மூன்று கோல்களையும், ரொபேர்ட்டோ பேர்மினோ மற்றும் மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒரு கோலையும் போட்டனர்.

இந்த அணிகளுக்கிடையேயான இரண்டாம் சுற்று போட்டிகள் இங்கிலாந்தின் அன்பீல்டு மைதானத்தில் மார்ச் ஆறாம் திகதி நடைபெறும்.

 

Latest articles

Similar articles