இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக மூவர் கைது

அறுகம்பேயில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படலாம் என்ற காரணத்தினால், சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்திய செய்தி

இலங்கையிலுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கருதப்படும் இருவரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் ஈராக்கில் வசிப்பவர் எனவும் இந்த தாக்குதலுக்காக 50 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கைதாகியவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும், மற்றையவர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்தவர் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல்தாரிகள் தொடர்பான விபரங்களை இலங்கை புலனாய்வுப் பிரிவினருக்கு கடந்த 7ம் திகதி (07/10/2024) இந்திய உளவு அமைப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு சபை கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles