இஸ்ரேலியர்கள் சில சுற்றுலா பகுதிகளில் இருந்து வெளியேற்றம்

இலங்கையில் இஸ்ரேலியர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தினால், இஸ்ரேலிய அரசாங்கம் தனது நாட்டு பிரஜகைகளை சில சுற்றுலா பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறும்படி கேட்டுள்ளது.

குறிப்பாக, மிக முக்கிய சுற்றுலா தளமான அறுகம்பே உட்பட இலங்கையின் தென் பகுதி மற்றும் மேற்கு பகுதி பிரபல கடற்கரையோரங்களில் மேற்குலக சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என அமெரிக்கா தனது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, பிரித்தானியா, ரஷ்யா போன்ற நாடுகளும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் பகுதிகளுக்கு விஷேட அதிரடிப்படையினர், மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles