பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியிழந்தார்

பாகிஸ்தானின் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் இராஜினாமா செய்துள்ளார். அவருக்கு எதிராக கொண்டுவர்ப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின் முன்னரே அவர் இராஜினாமா செய்துள்ளார்.

இம்ரான் கானும், அவரது கட்சியினரும் வெளியேறிய பின்னர் நம்பிகையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து இயங்குவதாக குற்றம் சுமத்திய இம்ரான் கான், ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை தான் கொண்டிராதபடியால், தனக்கு எதிரான சூழ்ச்சிகளை அமெரிக்காவே மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார். இருப்பினும் அமெரிக்கா இம்ரான் கானின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது.

Latest articles

Similar articles