போர்க் குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதை ஜனாதிபதியே நிரூபிக்க வேண்டும் – கோத்தபாய

இலங்கையில் இராணுவத்தினர் போர்க் குற்றங்கள் புரிந்ததாக கூறப்படும் பொய்க் குற்றச்சாட்டுக்களை, பொய் என்பதை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவே நிரூபிக்க வேண்டும் என இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இறுதிப்போர் இடம்பெற்ற காலத்தில், தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். (அத்தருணத்தில் முன்னாள் ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.) அந்த காலகட்டத்தில் இறுதிப்போரில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்தே இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

எனவே தற்போது ஜனாதிபதியாக இருக்கும் அவர் அந்த குற்றச்சாட்டுக்கள் பொய் என நிரூபிக்க வேண்டுமென குறிப்பிட்ட கோத்தபாய ராஜபக்ஸ, இது அவரது கடமையும் கூட என சுட்டிக்காட்டினார்.

Latest articles

Similar articles