கோத்தபாய ராஜபக்ச செய்த குற்றங்களைப் பட்டியலிடும் மங்கள

​​இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்ட குற்றங்களை நிதி அமைச்சர் மங்கள சமரவீர பட்டியலிட்டுள்ளார்.

மகிந்த ஆட்சியில் சர்வாதிகாரப்போக்கில் செயற்பட்ட கோத்தபாய ராஜபக்ச மீது மங்கள சமரவீரவினால் பட்டியலிடப்பட்ட குற்றச் சாட்டுக்கள் இதோ,

– சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க இராணுவப் புலனாய்வு அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டமை,
– வெலிக்கடைச் சிறையில் 26 கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை,
– வெலிவேரியவில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை
– கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு முறையற்ற விதத்தில் இராஜதந்திரக் கடவுச்சீட்டை பெற்றுக் கொடுத்தமை,
– ‘மிக்’ போர் விமான கொள்வனவிற்கான பேரத்தில் ஊழல் (பிரித்தானியாவில் உள்ள நிறுவனம் ஒன்றின் மூலம் ஊடாக மிக் பேரத்தில் 7.8 மில்லியன் டொலரை கையாடியவர்)
– ‘நேசன்’ இதழின் ஆசிரியர் கீத் நொயார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை,
– ‘ரிவிர’ ஆசிரியர் உபாலி தென்னக்கோன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கப்பட்டமை,
– ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை,
– ‘அவன்ட் கார்ட்’ நிறுவன பேரத்தின் மூலம் ஊழல்,
– ராஜபக்ச நினைவிடம் அமைத்ததில் ஊழல்,

மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மைக் காப்பதற்காக சட்டவாளர்களுக்கு மில்லியன் கணக்கான ரூபாவைச் செலவிடுகிறார் எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சாட்டினார்.

Latest articles

Similar articles