கோத்தபாய நாட்டைவிட்டு வெளியேறினார்!

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச விமானப்படை விமானத்தில் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார் என BBC செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

எந்த நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார் என எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரும் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர். இவர்கள் இன்னும் இலங்கையில் உள்ளார்களா இல்லை இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்களா என்ற எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

மக்கள் புரட்சியை அடுத்து தலைமறைவாக இருந்த கோத்தபாய ராஜபக்ச இன்று(13/07) உத்தியோகபூர்வமாக பதவி விலகுவார் என சபாநாயகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் BBC செய்திச்சேவை தெரிவித்துள்ளது. பசில் ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை கொண்டிருப்பதால், அமெரிக்காவிற்கு சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

பிரபலமானவை