69 இலட்சம் மக்களின் விருப்பம் இதுதான்

6,924,255 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றிபெற்ற கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரர்களில் ஒருவரான மகிந்த ராஜபக்சவை நேற்று (21/11) பிரதமராக நியமித்தார்.

இன்று (22/11) தனது இன்னொரு சகோதரரான சாமல் ராஜபக்சவை மிக முக்கிய அமைச்சராக நியமித்துள்ளதுடன், இன்னும் பல முக்கிய அமைச்சுக்களை மகிந்த ராஜபக்சவிற்கு ஒதுக்கியுள்ளார்.

15 பேர் கொண்ட இடைக்கால அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். இதில் சாமல் ராஜபக்சவிற்கு மகாவலி, விவசாயம் மற்றும் வர்த்தக தொடர்பான அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் மகிந்த ராஜபசவிற்கு நிதி, பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு, பொருளாதாரம், பௌத்த சாசனம், என பல அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் வரைக்குமே இந்த இடைக்கால அரசு செயற்படும். இருப்பினும் குறுகிய கால அரசிலும் தனது சகோதர்களே இருக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி கோத்தபாய உறுதியாக இருந்துள்ளார்.

இந்தளவு குறுகிய மனப்பாண்மை கொண்ட ஒருவர் எவ்வாறு இலங்கையை கட்டி எழுப்புவார் என 69 இலட்சம் சிங்கள மக்கள் நம்புகிறார்கள்??

பிரபலமானவை