எரிபொருள் வழங்கலில் கட்டுப்பாடு – CPC

இன்று முதல் (15/04) எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள் வழங்கலில் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

இதற்கமைய அதிகபட்சமாக,
மோட்டார் சைக்கிள்கள் 1,000 ரூபாய்க்கும்,
முச்சக்கர வண்டிகள் 1,500 ரூபாய்க்கும்,
கார் வான் ஜீப் போன்ற வாகனங்கள் 5,000 ரூபாய்க்கும் எரிபொருளை நிரப்ப முடியும்.

பேருந்துகள், பாரவூர்திகள், உழவு இயந்திரங்கள் மற்றும் வணிகம் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு கட்டுப்பாடு இல்லை எனவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று 41,000 மெற்றிக்தொன் டீசல் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், இன்று 37,500 மெற்றிக்தொன் பெற்றோல் வர உள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles