அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் ஆகியோர் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இருவரும் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதாக அறிவித்துள்ளனர்.

74 வயதான டொனால்ட் டிரம்ப் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரப் பணிகளில் மிகவும் சுறுசுறுப்பாக செயற்பட்டுக்கொண்டிருந்த இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறு கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளமை பல மில்லியன் அமெரிக்க மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கொரோன வைரஸ் சீனாவினால் உருவாக்கப்பட்டதாக டிரம்ப் வெளிப்படையாகவே தொடர்ச்சியாக தெரிவித்து வந்துள்ளார். கொரோனாவினால் சீனாவைத் தவிர அனைத்து நாடுகளும் கடும் பொருளாதாரப் பின்னடைவுகளைச் எதிர்கொண்டுவருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.