அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை வெளியான முடிவுகளின்படி, கமலா ஹாரிசை விட ஐந்து மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.
இதுவரை வெளியான முடிவுகளின்படி செனட் சபையில் 51 ஆசனங்களைப் பெற்றுள்ள குடியரசுக் கட்சி, மேலும் சில ஆசனங்களைப் பெற்று, செனட் சபையிலும் பலம் வாய்ந்த கட்சியாக மாறுகிறது.
2016 அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார். பின்னர் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில், ஜனநாயக கட்சியினரின் மோசடிகள் மூலமாக ஆட்சியைப் கைப்பற்றியாதாக குற்றம் சுமத்திய டொனால்ட் டிரம்ப், தான் தேர்தலில் தோற்கவில்லை எனவும் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.