இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (TATA), வயது 86 மும்பையில் காலமானார்.
டாடா (TATA) குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா இந்தியாவின் ஒரு மிக முக்கிய அடையாளம். இந்திய பொருளாதார வளர்ச்சியில் அவரின் பங்களிப்பு மிகப் பெரியது. உலக வரைபடத்தில் இந்தியாவின் பொருளாதார தரத்தை உயர்த்தியதில் ரத்தன் டாடா முதன்மையானவராகத் திகழ்கிறார்.

“தொழிலாளிகளின் முதலாளி” ஆக விளங்கிய ரத்தன் டாடா, தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு பல ஆயிரக்கணக்கான ஆக்கபூர்வமான விடயங்களை இவர் மேற்கொண்டுள்ளார்.
இந்திய மக்கள் மனதில் டாடா என்றும் வாழ்ந்துகொண்டே இருப்பார்.