இலங்கையில் வேகமாகப் பரவும் டெல்டா வைரஸ்

இலங்கையில் கொரோனாவின் டெல்டா வகை வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. டெல்டா வகை வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

பிரதான வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களுக்கு வழங்குவதற்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலையும் காணப்படுகிறது. மேலும் ஆதார வைத்தியசாலைகளும் தொற்றாளர்களினால் நிரம்பி வழிவதால், இலங்கை சுகாதாரத் துறை பாரிய சவால்களை எதிர் கொண்டுவருகிறது.

டெல்டா வகை வைரசின் பரவல் பல மடங்கு வேகமாக காணப்படுவதால், நாட்டை மீண்டும் முற்றாக முடக்கும் நிலை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

இதேவேளை முப்பது வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசிகளை பெறுமாறு இலங்கை சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles