அமெரிக்கா, பிறேசில் மற்றும் இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளன.

நேற்று மட்டும் அமெரிக்காவில் 3,409 பேரும், பிறேசிலில் 1,186 பேரும் இங்கிலாந்தில் 830 பேரும் கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. அமெரிக்காவில் நேற்று மட்டும் 219,966 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை இங்கிலாந்தில் 60,917பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் நேற்று மட்டும் 484பேர் நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் இருவர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரசினை உலகிற்ற்கு பரப்பிய சீனாவில் 33 பேர் மட்டுமே தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.