10 லட்சம் உய்கூர் முஸ்லிம்களை சீனா கைதுசெய்துள்ளதாக ஐ.நா குற்றசாட்டு

சீனாவிலுள்ள சின்ஜியாங்கில் நிலவுகின்ற அமைதியின்மைக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் / பிரிவினைவாதிகள் காரணம் எனக்கூறி, இதுவரையில் பத்து லட்சம் உய்கூர் முஸ்லிம்களை சீனா கைதுசெய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றசாட்டியுள்ளது.

ஒரு கோடி சிறுபான்மையின மக்கள் வாழுகின்ற சின்ஜியாங் மாநிலத்தில் காரணங்களின்றி, சட்டபூர்வமற்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் மக்கள் கைது செய்யப்படுவதை சீன நிறுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தடுத்துவைக்கப்பட்டுள்ள பல இஸ்லாமியர்களை, வலுக்கட்டாயமாக பன்றி இறைச்சி உண்ண வைக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest articles

Similar articles