கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2600ஐத் தாண்டியது

சீனா மற்றும் பல நாடுகளில் பரவிவரும் COVID-19 (கொரோனா) வைரசின் தாக்கத்தினால் இதுவரை (10am IST) உயிரிழந்தவரிகளின் எண்ணிக்கை 2619ஐத் தாண்டியுள்ளது. மேலும் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,561 ஐத் தொட்டுள்ளது.

சீனாவில் மட்டும் 2592பேர் உயிரிழந்திருப்பதுடன், 77,345பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

தென்கொரியா, மற்றும் ஐரோப்பிய நாடான இத்தாலியில் திடீரென பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரசினால் பாதிப்புகள் அதிகரித்துள்ளதுடன், பல நகரங்கள் மூடப்பட்டுள்ளன.

தென் கொரியாவில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்திருப்பதுடன், 837பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தாலியில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதுடன், 157பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

COVID-19 (கொரோனா) வைரஸின் தாக்கத்தினால் இதுவரை (24/02/20, 10 am IST) ஏற்பட்டுள்ள பாதிப்புகள்.

உயிரிழப்பு : 2619

பாதிக்கப்பட்டோர்

  • சீனா  – 77,345
  • ஜப்பான் – 837
  • தென் கொரியா – 763
  • இத்தாலி – 157
  • சிங்கப்பூர் – 89
  • ஹொங்கொங் – 74
  • ஈரான் – 43
  • தாய்லாந்து – 35
  • அமெரிக்கா – 35
  • தாய்வான் – 28
  • மலேசியா – 22
  • ஆஸ்திரேலியா – 22
  • ஜேர்மனி – 16
  • வியட்னாம் – 16
Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles