கொரோனா வைரஸின் பரவல் அதிகரிப்பு. உயிரிழப்பு 300 ஆக உயர்வு

சீன தேசத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் இதுவரை 304பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 14,300 மேற்பட்டோரும், உலகலாவியரீதியில் 210ற்கு மேற்பட்டோரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் தாக்கத்தின் வேகம் சற்று அதிகமா இருப்பதால், உயிரிழப்பு மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இன்று (02/02) பிலிப்பைன்ஸ் நாட்டில் 44 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவிற்கு வெளியில் ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பு இதுவாகும்.

இதேவேளை ஆஸ்திரேலியாவில் இதுவரை 12 பேரும், அமெரிக்காவில் 8 பேரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் பொருளாதாரத்தில் கணிசமான செல்வாக்கைச் செலுத்தி வந்த சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த வரைஸ் தாக்கத்தினால், ஏனைய நாடுகளும் கடும் பொருளாதார பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக சுற்றுலா, ஏற்றுமதி, இறக்குமதி போன்றவற்றில் பாரிய வீழ்ச்சியை உலகநாடுகள் எதிர்நோக்கியுள்ளன

Latest articles

Similar articles