லெபனானின் தலைநகரான பேரூட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிர்ழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.

துறைமுகத்தில் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 2750 தொன்கள் அமோனியம் நைதிரேட் இரசாயனப் பொருளில் ஏற்பட்ட தீ விபத்தினால் இந்த மாபெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அமோனியம் நைதிரேட், செயற்கை உரம் தயாரிப்பில் அல்லது வெடி பொருட்கள் தயாரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்ற ஒரு இரசாயனப் பொருளாகும்.

இருவாரங்கள் அவசரகால சட்டம் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதுடன், துறைமுக அதிகாரிகள் பலர் விசாரனைக்காக வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற முறையில் ஆறு வருடங்களா களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அமோனியம் நைதிரேட் தொடர்பாக, பல தடவைகள் அரச உயர் மட்டத்தினருக்கு தெரியப்படுத்தப்படிருந்ததாகவும், இருப்பினும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் துறைமுக அதிகாரிகள் ஆதாரத்துடன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் நிபுனர்களின் கணிப்பின்படி, லெபனானில் இடம்பெற்ற வெடிப்பு, ஜப்பானில் வீசப்பட்ட அனுகுண்டின் பத்தில் ஒரு பகுதி வலுக்கொண்டத்தாகும் என தெரிவித்துள்ளனர்.