புதினம்
National news
இலங்கை இராணுவத்திற்கு சமூக வலைத்தளங்களின் பாவனையில் கட்டுப்பாடு
புதினம் -
தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிற்கும்விதமாக, அரசியல்வாதிகளை அல்லது அதிகாரிகளை அவமதிக்கும்வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்களில் எந்தவொரு இராணுவ வீரரும் தமது பதவிகளை வெளிப்படுத்தக்கூடாதென்றும், சீருடையுடன் மற்றும் இராணுவ தளபாடங்களுடன் இருக்கும் படங்களை பதிவேற்றக் கூடாதெனவும் சகல இராணுவ வீரர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
National news
கண்டி திகண பிரதேசத்திற்கு இராணுவம் வரவழைப்பு
புதினம் -
இலங்கை காவல்துறையினரால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்போனதால், திகண பிரதேசத்திற்கு இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார். சுமார் 200 இராணுவ வீரர்கள் கொண்ட சிங்க படையணி திகண பிரதேசத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது. திகண பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், சில கடைகள், வீடுகள் என்பனவும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தால், திகண பிரதேசத்தின்...
Local news
இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்
புதினம் -
கண்டியில் ஏற்பட்டுள்ள கலவரத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். சமூகத்தில் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவருவதற்காக காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். President promulgated a State Emergency a short while ago to redress the unsatisfactory security situation prevailing in certain parts...
Local news
சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் அவசியம் – கனடா உறுதி
புதினம் -
சர்வதேச விசாரணையாளர்கள் மற்றும் நீதிபதிகளின் பிரசன்னத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், இலங்கை அதன் பொறுப்புக்கூறும் தன்மையை சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்தவேண்டும் என கனடா காட்டமாக தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் (UNHRC) 37 வது கூட்டத் தொடரிலேயே கனடா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. "இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் முடிவு முக்கியமானதாக இருப்பினும், அது ஒரு முதல்...
National news
பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களைக் கைது செய்க
புதினம் -
கொழும்பு மாநகர எல்லை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கழிவுகளைக் கொட்டும் பொதுமக்களைக் கைது செய்யுமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இதுவரை வீதியோரங்களில் அகற்றப்படாமல் குவிந்திருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுமாறும் கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காணொளி
National news
குளியல் அறைக்குள் புகுந்த பௌத்த பிக்கு
புதினம் -
கேகாலை புவக்தெனிய பிரதேசத்தில் பெண் ஒருவர் குளித்துக்கொண்டு இருக்கும்போது, பௌத்த பிக்கு ஒருவர் குளியல் அறைக்குள் புகுந்துள்ளார். அப்பிரதேச விகாரையைச் சேர்ந்த 42 வயதுடைய பிக்கு ஒருவரே குளியலறைக்குள் புகுந்து பெண் ஒருவரை பலாத்தகாரம் செய்ய முயற்சித்ததுள்ளார். இருப்பினும் அந்த பெண் பிக்குவிடமிருந்து தப்பித்து அது தொடர்பாக வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பிக்குவை...
Local news
நல்லாட்சி அரசிலும் சித்திரவதைகள் தொடர்கிறது – அல் ஜஸீரா
புதினம் -
இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலும் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்கின்றது என அல் ஜஸீரா தொலைக்காட்சி ஆதாரங்களுடன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
Local news
பருத்தித்துறையில் 10kg கஞ்சா மீட்பு
புதினம் -
நேற்று முன்தினம் (01/03) பருத்தித்துறை பகுதியில் வீடு ஒன்றிலிருந்து 10kg கஞ்சா நெல்லியடி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சாவை பொதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஐந்துபேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Sports news
சாதிக்க வயது தடையல்ல, ஆஸ்திரேலிய முதியவரின் உலகசாதனை
புதினம் -
எம்மில் பலருக்கு வாழ்க்கையில் எதை சாதிப்பது? எதை சாதித்தால் வாழ்க்கையில் உணர்வூக்கம் ஏற்படும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. வாழ்க்கையின் சுழலோட்டத்தில் சிக்கிய சிறு துரும்புகள் போல நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் கீழே இடப்பட்ட பதிவு உங்களில் பலருக்கு புது உத்வேகத்தை தரும் என்பதில் ஐயமில்லை. 99 வயது நிரம்பிய ஜோர்ஜ் கொரோனஸ் என்ற...
Local news
தமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி சசிதரன், சிவகரன் நீக்கம்
புதினம் -
தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் செயலாளரான சிவகரன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினரும் அமைச்சருமான அனந்தி சசிதரன் ஆகியோரை இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதென தமிழரசுக் கட்சி எடுத்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் இவர்கள் இருவரது செயற்பாடுகளும்...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
