ஆகஸ்ட் மாதம் முதல் செயற்படவுள்ள விசேட உயர் நீதிமன்றங்கள் – பிரதமர்

​பெரும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை விசாரிக்கும் வகையில் விசேட உயர் நீதிமன்றங்கள் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் செயற்படத்தொடங்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கம்பஹாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியின்போதே மேற்படி தகவலை வெளியிட்ட பிரதமர், இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவினால் மந்திரிசபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மந்திரிசபையால் ​ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரேரணை விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும். புதிதாக உருவாக்கப்படவுள்ள விசேட உயர் நீதிமன்றங்கள், ஆரம்பத்தில் தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்கவேண்டும்” என தெரிவித்தார்.

Latest articles

Similar articles