புதினம்

ஊர்காவற்துறையில் 100இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ் ஊர்காவற்துறையில் உணவு ஒவ்வாமையால் 100இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெலிஞ்சிமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது வழங்கப்பட்ட உணவை உண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். சம்பவம் தொடர்பாக காவல்துறையினரும், சுகாதார பரிசோதகர்களும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

யாழ் நக­ரில் எட்­டுக் கடை­க­ளுக்கு சீல் வைப்பு

யாழ் நக­ரில் மாந­கர சபை­யின் சுகா­தா­ரப் பிரி­வி­னர் மேற்கொண்ட சோதனைகளையடுத்து 18 கடை­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்­கல் செய்யப்பட்டது. இதன்­போது எட்­டுக் கடை­க­ளுக்கு சீல் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­படத்தையடுத்து, அக்கடைகள் சீல் வைத்து மூடப்­பட்­டன. யாழ் நக­ரிலுள்ள உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுகா­தா­ரப் பிரி­வி­னர் மேற்கொண்ட சோதனைகளில், சுகா­தார சீர்கேட்­டு­டன் இயங்கி வந்த உண­வகங்­கள்...

நாடு கடத்தப்படவிருந்தவர்கள் இறுதி நிமிடத்தில் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்

பிந்திய இணைப்பு  இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த தமிழ் குடும்பம் இறுதி நிமிடத்தில் விமானத்திலிருந்து  குடிவரவு அதிகாரிகளால் இறக்கப்பட்டுள்ளனர். நடேசலிங்கம், பிரியா மற்றும் அவர்களது இரு குழந்தைகளே இவ்வாறு இறுதி நிமிடத்தில் நாடு கடத்தப்படும் அபாய கட்டத்தை தற்காலிகமாக கடந்துள்ளனர். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஒரு சிறிய ஊரான பிலேவிலாவில் (Biloela) வசித்துவந்த நடேசலிங்கம் குடும்பத்தை நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து...

கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு – பிரதமர்

கண்டி கலவரம் முழுமையாக கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

365 நாட்களாக தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம்

முல்லைத்தீவில் நடைபெறும் காணாமல் போனோரின் கவனயீர்ப்புப் போராட்டம் 365 நாட்களை தாண்டி செல்கிறது. இதுவரை எந்த ஒரு தமிழ் அரசியல் பிரமுகர்களோ அல்லது அரச பிரதிநிதிகளோ பொறுப்பான பதில் எதனையும் வழங்கவில்லை. இருப்பினும் மக்கள் நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன உறவுகள் மீண்டும் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தங்கள்...

கிளிநொச்சியிலுள்ள ஐந்து பள்ளிவாசல்களிற்கும் இராணுவ பாதுக்காப்பு

கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐந்து பள்ளிவாசல்களிற்கும் இராணுவ பாதுக்காப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களிற்கு எதிரான வன்முறைகளையடுத்து இந்த இராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கலவரத்தை தூண்டிய 10 சந்தேக நபர்கள் கைது

கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான கலவரத்தை தூண்டியதாக சந்தேகிக்கப்படும் 10 பேரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார். இதில் பௌத்த பிக்குகள் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளபோதும் இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. அவசரகால சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட்ட 10 சந்தேக நபர்களும், மேலதிக விசாரைணகளுக்காக கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.  

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார

இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார இன்று (08/03) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளார். மொனராகலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான  ரஞ்சித் மத்தும பண்டார, முன்னரும் அமைசச்சர் பதவிகளை வகித்துள்ளார். இலங்கையில் தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படும் இந்த அமைச்சுப் பதவி, முன்னாள் இராணுவத் தளபதி...

இலங்கையில் சமூகவலைத்தளங்களின் பாவனைக்கு கட்டுப்பாடு

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளிற்கிணங்க, சமூகவலைத்தளங்களின் பாவனையில் பாரிய கட்டுப்பாடுகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அமுல்படுத்தியுள்ளது. போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்கவும், சமூகத்தில் தேவையற்ற கருத்துக்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் சமூகவலைத்தளங்களின் பாவனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இணையப் பாவனையாளர்கள் சமூகவலைத்தளங்களைப் உபயோகிக்கும்போது, தடங்கல்கள் மற்றும் பெரும் வேகக் குறைவை (low speed) உணருவார்கள்.  

கண்டி கலவரம் சொத்து இழப்புக்கள் விபரம்

கண்டி திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்றுவரும் கலவரங்களினால் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் சம்பந்தமாக எவ்வித தகவல்களும் வெளியாகாத போதிலும், முஸ்லிம் மக்களின் பல சொத்துக்கள் உடைத்தும், எரித்தும் நாசமாக்கப்பட்டுள்ளன. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, இதுவரையில் (6ம் திகதிவரை) 4 பள்ளிவாசல்கள், 35 வாகனங்கள், 37 வீடுகள், 46 கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளன என...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img