700,000 ஆப்ஸை அகற்றிய கூகுள்

2017ம் ஆண்டு, கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கான 700,000  பாதுகாப்பற்ற செயலிகளை (ஆப்ஸ்) அகற்றியுள்ளது. இது 2016ம் ஆண்டு அகற்றிய பாதுகாப்பற்ற செயலிகளின் அளவிலும் பார்க்க 70% அதிகமாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திலுள்ள பாவனையாளர்களுக்கு பாதகம் விளைவிக்கும் செயலிகளை அகற்றுவதற்காக, கூகுள் நிறுவனம் எடுத்த கடும் முயற்சியே இந்தளவு பெருமெண்ணிக்கையான செயலிகள் அகற்றப்பட காரணமாகும்.

இவ்வாறான செயலிகள், பாவனையாளர்களுக்குத் தெரியாமல், அவர்களின் தகவல்களைத் திருடுதல், கைப்பேசி/டேப்லட் போன்றவற்றின் செயற்பாடுகளை மெதுவக்கும்தன்மை கொண்டவையாகக் காணப்படுகின்றன.

Latest articles

Similar articles