புதினம்

மஹசோன் பலகய அமைப்பின் அலுவலகம் முற்றுகை

கண்டி குண்டசாலைப் பகுதியில் அமைத்திருந்த "மஹசோன் பலகய" அமைப்பின் அலுவலகத்தை பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர். இந்த அமைப்பே இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான கலவரங்களுக்கு பின்புலத்தில் இருந்ததாக தெரியவருகிறது. அண்மையில் கைது செய்யப்பட்ட இந்த அமைப்பின் தலைவர் என சந்தேகிக்கப்படும் அமித் ஜீவன் வீரசிங்க (26) என்பவரை கடும் விசாரணைக்குள்ளாக்கியபோது கிடைத்த தகவலையடுத்தே...

அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை இல்லை – சட்ட அமைச்சர்

​கடந்த செய்வாக்கிழமை (06/03) இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ​கலவரங்களையடுத்து நாடு இப்போது சுமூக நிலைக்குத் திரும்பியுள்ளது, ​எனவே அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் அவசியம் இல்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார். கண்டியில் ஏற்பட்ட கலவரங்களையடுத்து அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம்...

சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது என இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ​​​பிறைஸ் ஹட்ச்ஸோன் தெரிவித்துள்ளார்.​ Time (overdue) to lift Sri Lanka’s blanket blocking of key social media platforms - a blunt instrument #SocialMediaBlock— Bryce Hutchesson (@AusHCSriLanka)...

குரங்கணி ​ ​காட்டுத்தீ விபத்தில் இறந்தவர்களுக்கு மோடி, ராகுல் காந்தி இரங்கல் தெரிவிப்பு

​தேனி மாவட்டம் போடி ​​குரங்கணி ​​காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்க​லைத் தெரிவித்துள்ளார். ​ My condolences to the families of those who lost their lives in the Theni forest fire. I hope that those who are injured recover...

நேபாள விமான விபத்து, 49 பேர் பலி 22 பேர் காயம்

நேபாளம் காத்மண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 49 பேர் கொல்லப்பட்டு, 22 பேர் காயமடைந்துள்ளனர். 71 பேருடன் பயணம் பயணித்த பங்களாதேஷ் நாட்டின் தனியார் விமான சேவையின் S2-AGU ரக விமானமே தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நேபாள அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்.

ஜனா­தி­பதி பதவிக்கு தகுதியானவர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­ – குண­தாச அம­ர­சே­கர

இலங்­கையின் அடுத்த நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பத­விக்கு போட்­டி­யி­டு­வ­தற்­கான அனைத்து தகை­மை­களும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கு காணப்­ப­டு­கின்­றது என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கரா தெரி­வித்துள்ளார். 2020ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் பாரிய மாற்­றங்கள் உரு­வா­கு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் காணப்­ப­டு­கின்­றன எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் கூட்டு எதிர்­க்கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பொது...

15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள்

தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான ஆகக் குறைந்த வயதெல்லையாக 15 வயது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆகக் குறைந்த வயதெல்லையாக 16 வயது காணப்பட்டது. இதன்படி 15 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மாணவர்கள் தமது அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை உரிய பாடசாலை அதிபரின் ஊடாக அனுப்பி,...

காடையர்களுடன் சேர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட பிக்கு

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் மிகவும் திட்டமிட்டு நடந்ததை சில CCTV காணொளிகள் காண்பித்துள்ளன. அத்துடன் பௌத்த பிக்கு ஒருவரும் கலவரத்தில் ஈடுபடுவதை தெளிவாகப் பார்க்க முடிகிறது.   காடைத்தனத்தில் ஈடுபடுபவர்கள் ஓரிடத்திலிருந்து திட்டமிட்டபின்னர் குழுவாக அணிவகுத்து வருவது தெளிவாக காணொளியில் பார்க்க முடிகிறது. மேலும் காவியுடுத்திய பௌத்த பிக்கு மிகவும் வெறித்தனத்துடன் தனது காடைத்தனத்தை வெளிப்படுத்தியமையும் காணொளியில்...

காணாமல் போயிருந்த முஸ்லிம் வர்த்தகர் சடலமாக மீட்பு

காத்தான்குடி நகரிலிருந்து கடந்த சனிக்கிழமை (10/03) இரவு காணாமல் போயிருந்த வர்த்தகரான ஏ.எல்.எம். முஹம்மது முபாறக் (35) மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

கலவரம் தொடர்பாக இதுவரை 230 பேர் கைது

இலங்கையில் அண்மையில் நடந்த கலவரங்கள் தொடர்பாக இதுவரை 230 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார். இதில் 161பேர் கண்டி மாவட்டத்திலும், 69பேர் ஏனைய மாவட்டங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.  

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img