நாடு கடத்தப்படவிருந்தவர்கள் இறுதி நிமிடத்தில் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்

பிந்திய இணைப்பு 

இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த தமிழ் குடும்பம் இறுதி நிமிடத்தில் விமானத்திலிருந்து  குடிவரவு அதிகாரிகளால் இறக்கப்பட்டுள்ளனர்.

நடேசலிங்கம், பிரியா மற்றும் அவர்களது இரு குழந்தைகளே இவ்வாறு இறுதி நிமிடத்தில் நாடு கடத்தப்படும் அபாய கட்டத்தை தற்காலிகமாக கடந்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஒரு சிறிய ஊரான பிலேவிலாவில் (Biloela) வசித்துவந்த நடேசலிங்கம் குடும்த்தை நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்று திரண்ட அந்த ஊர் மக்கள், உள்விவகார அமைச்சருக்கு நாடு கடத்தலை தடுக்கக்கோரி 76,000 கையெழுத்துக்களை திரட்டியிருந்தனர்.

australia tamil family deported

அத்துடன் சட்டவாளர்களின் துரித நடவடிக்கையால், இறுதி நிமிடத்தில் இந்த நாடுகடத்தல் நடவடிக்கை தடுக்கப்பட்டது.

australia tamil family deported

இந்த நிகழ்வு ஆஸ்திரேலியா மட்டுமின்றி, உலகலாவியரீதியில் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

முன்னைய செய்தி

 

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படும் தமிழ் குடும்பம்

 

அவுஸ்திரேலியாவில் புகலிடம்கோரி தஞ்சமடைந்திருந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட தமிழ் குடும்பம், ஐந்து வருட தற்காலிக விசா முடிவடைந்த நிலையில் இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படும் அபாய கட்டத்தில் உள்ளனர்.

இது தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஏதிலிகள் கழகத்தின் ஊடக அறிக்கை,

australia tamil family deported

 

 

 

Latest articles

Similar articles