கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு – பிரதமர்

கண்டி கலவரம் முழுமையாக கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா என்னுடன் ஆலோசித்தபின்னர் ரஞ்சித் மத்தும பண்டாரவை சட்ட ஒழுங்கு அமைச்சராக நியமித்தார். அமைச்சர் கண்டி நிலவரம் தொடர்பாக முழுக்கவனம் எடுப்பார். கண்டி மாவட்டத்திற்கு தேவையான உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நட்டஈடு வழங்கும் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

சமூக வலைத்தலளங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர், “முறையற்ற விதத்தில் சமூக வலைத்தலளங்களை பாவித்து பொய்யான தகவல்களைப் பரப்பியதால், நாட்டின் பெயரிற்கு பாரிய களங்கம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தினால் நாட்டின் சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், பொருளாதாரத்தினையும் கடுமையாகத் தாக்கியுள்ளது.” என்றார்.

 

Latest articles

Similar articles