புதினம்

அமிர்தலிங்கத்தின் சிலை திறப்பும், தமிழரசுக்கட்சியும்…

1979இல் இலங்கை பாராளுமன்றத்தின் முதல் தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் சிலை சுழிபுரத்தில் கடந்த 18ம் திகதி (18/03), தற்போதைய எதிர்க்கட்சி தலைவரான இரா.சம்பந்தனால் திறக்கப்பட்டது. சிலை திறப்புவிழாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் காணாமல் போனோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்படும் அமைதிப்போராட்டத்திற்கு கொடுக்கப்படவில்லை. பதிவு இணையத்தளத்தில் வெளியான முழுமையான கட்டுரையைப் படிக்க இங்கே அழுத்தவும்.  

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றில்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினரால் கையளிக்கப்பட்ட இந்த பிரேரணையில் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதில் 4 சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.  

சசிகலா கணவர் நடராசன் காலமானார்

சசிகலா கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் சென்னையில் காலமானார். தஞ்சாவூரை சேர்ந்த நடராசன், ஜெயலலிதா ஆட்சியில் அ.தி.மு.க கட்சியின் பின்புலத்தில் பல திறமையான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

76% வாக்குகளைப் பெற்று மீண்டும் ரஷ்ய அதிபரானார் விளாமிடிர் புடின்

1999ம் ஆண்டிலிருந்து ரஷ்யாவை ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ புடின் ஆண்வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைப்பதற்காக, ஜனாதிபதி இன்று (19/03) யாழ்ப்பாணம் வருகிறார்.

பளையில் இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி, ஒருவர் காயம்

இராணுவத்தின் பிக்கப் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஒன்பது மாதத்தில் 1800kg கேரளா கஞ்சா மீட்பு

யாழ் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் 1800kg கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் பெர்னான்டோ தெரிவித்தார். இதேவேளை வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலேயே அதிகளவான கேரளா கஞ்சாவை இலங்கை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பருத்தித்துறையில் 10kg கஞ்சா மீட்பு மன்னாரில் பெருமளவான கஞ்சா மீட்பு,...

ஞானசார தேரரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிவான் உத்தரவு

​​பொலனறுவையில் மத முரண்பாட்டை தோற்றுவிக்கும் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும்  வழக்கு விசாரணையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்ஞானசார தேரர் சமூகமளித்திருக்கவில்லை. இதனால் அவரைக் கைது செய்யுமாறு  கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.   ஜப்பான் சென்றுள்ள மைத்திரிபால சிறிசேனாவின் குழுவில் ஞானசார தேரரும் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ அண்மையில்...

இலங்கையில் முகநூலின் மீதான தடை நீக்கப்பட்டது

இலங்கையில் கடந்த 7ம் திகதியிலிருந்து (07/03) அமுலிலுள்ள முகநூல் தளத்தின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. முகநூல் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதியின் செயலாளர் குழுவிற்குமிடையிலான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றிருப்பதால், முகநூல் தளத்தின் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தொலைத்தொடர்பு சீராக்கல் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார். On my instructions, my secretary has discussed with officials...

23 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றும் பிரிட்டன்

பிரிட்டனில் இடம்பெற்ற முன்னாள் ரஷ்ய உளவாளி மற்றும் அவரது மகள் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கம் அளிக்காததால், பிரிட்டனிலுள்ள 23 ரஷ்ய அதிகாரிகளை வெளியேறுமாறு பிரிட்டன் பணித்துள்ளது. ஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img