மஹசோன் பலகய அமைப்பின் அலுவலகம் முற்றுகை

கண்டி குண்டசாலைப் பகுதியில் அமைத்திருந்த “மஹசோன் பலகய” அமைப்பின் அலுவலகத்தை பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.

இந்த அமைப்பே இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான கலவரங்களுக்கு பின்புலத்தில் இருந்ததாக தெரியவருகிறது.

அண்மையில் கைது செய்யப்பட்ட இந்த அமைப்பின் தலைவர் என சந்தேகிக்கப்படும் அமித் ஜீவன் வீரசிங்க (26) என்பவரை கடும் விசாரணைக்குள்ளாக்கியபோது கிடைத்த தகவலையடுத்தே “மஹசோன் பலகய” அமைப்பின் அலுவலகம் அதிரடியாக முற்றுகையிடப்பட்டது.

இந்த அலுவலகத்திலிருந்து இனவாதத்தைத் தூண்டும் பரப்புரை துண்டுப் பிரசுரங்கள், கணனிகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள் என்பவற்றை பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்

“மஹசோன் பலகய” அமைப்பிற்கும் கடும் போக்குடைய பௌத்த அமைப்பான பொதுபலசேனாவின் பிரதம செயலாளரான ஞானசார தேரருக்கும் தொடர்பிருப்பது கீழுள்ள காணொளியில் தெளிவாக பார்க்கமுடிகிறது.

இந்த காணொளியில் “மஹசோன் பலகய” அமைப்பின் தலைவர் என சந்தேகிக்கப்படும் அமித் ஜீவன் வீரசிங்க என்பவர் ஞானசார தேரர் முன்னிலையில் கண்டி தாக்குதல் பற்றி திட்டமிடும் உரையாடல் நடைபெறுவதைக் காட்டுகிறது.

கடும் போக்குடைய பௌத்த அமைப்பான பொதுபலசேனா மஹிந்த ஆட்சிக்காலத்தில் மிகவும் பலம் பெற்று, அரச செல்வாக்கு பெற்ற அமைப்பாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles