புதினம்
National news
உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபாய்
புதினம் -
இலங்கையில் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் வரையில் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரி சமன் ஶ்ரீ ரத்நாயக்கா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான 10 பில்லியன் ரூபாய் நிதி பட்ஜெட்டில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும், அது நேற்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பட்ஜெட்டின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்...
Local news
சித்தார்த்தனின் நம்பிக்கை
புதினம் -
இனப்பிரச்சனைக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட்டால், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய கொள்கை வகுக்கும்போது, வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பையோ, ஆலோசனைகளையோ அரசு பெறுவதில்லை. தெற்கில் உள்ள கட்சிகளே எல்லாவற்றையும் மேற்கொள்கின்றன என...
Local news
12ம் திகதி முதல் யாழ்-சென்னை விமான சேவை ஆரம்பம்
புதினம் -
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்குமிடையிலான நேரடி விமான சேவை வரும் 12ம் திகதி முதல் (12/12) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அலியான்ஸ் எயார் (Alliance Air) நிறுவனம் வாரத்திற்கு நான்கு நாட்கள் யாழ்-சென்னை விமான சேவையை மேற்கொள்ளவுள்ளது. ஒரு வழிக்கட்டணமாக அண்ணளவாக ரூபாய் 42,000 (9,200 இந்திய ரூபாய்கள்) அறவிடப்படுகிறது. 90 நிமிட விமான பயணத்திற்காக ATR-72 வகை...
National news
ஜனவரி முதல் இணையத்தில் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்
புதினம் -
வரும் ஜனவரி மாதம் முதல் இலங்கையில் இணையத்தினூடாக கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என திணைக்களத்தின் தகவல் தொடர்பு கட்டளை அதிகாரி சம்பிக்க ராமவிக்கிரம தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரிகள் வீட்டிலிருந்தே கடவுச்சீட்டு விண்ணப்பத்தினை இணையத்தில் பூர்த்தி செய்து, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கலாம். இருப்பினும் கைரேகைகளை வழங்குவதற்கு விண்ணப்பதாரிகள் திணைக்களத்திற்கு சமூகமளிக்க வேண்டிவரும் எனவும், இதற்காக புதிய 50 கவுண்டர்கள் நிறுவப்படவுள்ளதாகவும்...
National news
5 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 15 வீதமானோர் போஷாக்கின்மையால் பாதிப்பு
புதினம் -
இலங்கையில் ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 15 வீதமானோர் போஷாக்கின்மையால் பாதிப்படைந்துள்ளனர் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்து வயதிற்குட்பட்ட 95 வீதமான சிறுவர்களின் நிலையை மதிப்பிட்டபோது, அதில் 15 வீதமான சிறுவர்கள் குறைவான எடையைக் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள். சிறுவர்களின் எடை குறைவிற்கு முக்கிய காரணம் முறையான போஷாக்கின்மையே ஆகும். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 2022ம் ஆண்டு...
National news
இலங்கையில் சமூக வலைத்தளங்களினூடான துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு
புதினம் -
சமூக வலைத்தளங்களினூடாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது இலங்கையில் அதிகரித்துள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களினூடாக மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பான 12,000 இற்கும் மேற்பட்ட வழக்குகள் கடந்த பத்து மாதங்களில் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பெண்கள், சிறுவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான துஷ்பிரயோகங்களைத் தடுக்க, பெற்றோர்கள் மற்றும்...
Local news
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு
புதினம் -
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம், அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மிக மிக அதிகளவில் அதிகரித்துள்ளதுள்ளதாக ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த, விசேட அதிரடிப்படையினரை கடமையில்...
World News
13,000 வரையிலான உக்ரேனிய படையினர் உயிரிழப்பு
புதினம் -
ரஷ்யா உக்ரேன் போர் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 10,000 தொடக்கம் 13,000 வரையிலான உக்ரேனிய படையினர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகரின் கருத்துப்படி, 10,000 தொடக்கம் 13,000 வரையிலான இராணுவத்தினர் போரில் இறந்துள்ளார்கள் என தெரியவருகின்றபோதிலும், உண்மையான இழப்புகள் அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இருப்பினும் உக்ரேனிய இராணுவத்தினர் எவ்வித உத்தியோகபூர்வ உயிரிழப்பு...
National news
இன்று (01/12) உலக எய்ட்ஸ் தினம்
புதினம் -
இன்று (01/12) உலக எய்ட்ஸ் (AIDS) தினமாகும். HIV எனும் வைரஸ் மூலம் ஏற்படும் எய்ட்ஸ் நோயிற்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இலங்கையில் ஏறத்தாழ 4,000 இற்கும் அதிகமானனோர் HIV தொற்றுடன் வாழ்ந்துவருகிறார்கள். பாலியல் தொழிலாலும், பாதுகாப்பற்ற ஓரினச் சேர்க்கையாலும் இலங்கையில் எய்ட்ஸ் நோய் பரவிவருகின்றது. குறிப்பாக இளைஞர்கள் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவதும் HIV தொற்றாளர்களின்...
Local news
யுத்தம் தோற்கடிக்கப்பட்டிருப்பினும் தமிழர்கள் தோற்றுவிடவில்லை – டக்ளஸ்
புதினம் -
2009இல் யுத்தம் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் தழிழர்கள் தோற்றுவிட்டதாக எவரும் கருத முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 1980களில் தமிழ் மக்களால் தட்டிக் கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை பற்றி பிரஸ்தாபிப்பதற்கு தாம் தயாரில்லை எனவும் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, அரசியலமைப்பின் 13வது திருத்தம் ஊடாக மாகாணங்களில் அடிப்படையில் பகிரப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம்...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
