5 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 15 வீதமானோர் போஷாக்கின்மையால் பாதிப்பு

இலங்கையில் ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 15 வீதமானோர் போஷாக்கின்மையால் பாதிப்படைந்துள்ளனர் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து வயதிற்குட்பட்ட 95 வீதமான சிறுவர்களின் நிலையை மதிப்பிட்டபோது, அதில் 15 வீதமான சிறுவர்கள் குறைவான எடையைக் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள். சிறுவர்களின் எடை குறைவிற்கு முக்கிய காரணம் முறையான போஷாக்கின்மையே ஆகும்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 2022ம் ஆண்டு சிறுவர்களின் மத்தியில் போஷாக்கின்மை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் ஒரு முக்கிய காரணியாகும்.

பிரபலமானவை