உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபாய்

இலங்கையில் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் வரையில் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரி சமன் ஶ்ரீ ரத்நாயக்கா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான 10 பில்லியன் ரூபாய் நிதி பட்ஜெட்டில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும், அது நேற்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பட்ஜெட்டின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இம்மாத இறுதியில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பாளர் நியமனங்கள் கோரப்படவுள்ளன என தெரிவித்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, 341 உள்ளூராட்சி பிரிவுகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பிரபலமானவை