ஜனவரி முதல் இணையத்தில் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்

வரும் ஜனவரி மாதம் முதல் இலங்கையில் இணையத்தினூடாக கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என திணைக்களத்தின் தகவல் தொடர்பு கட்டளை அதிகாரி சம்பிக்க ராமவிக்கிரம தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரிகள் வீட்டிலிருந்தே கடவுச்சீட்டு விண்ணப்பத்தினை இணையத்தில் பூர்த்தி செய்து, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கலாம்.

இருப்பினும் கைரேகைகளை வழங்குவதற்கு விண்ணப்பதாரிகள் திணைக்களத்திற்கு சமூகமளிக்க வேண்டிவரும் எனவும், இதற்காக புதிய 50 கவுண்டர்கள் நிறுவப்படவுள்ளதாகவும் சம்பிக்க ராமவிக்கிரம தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 50 பிரதேச செயலகங்கள் கைரேகைகளைப் பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரபலமானவை