புதினம்

வடமேல் மாகாணத்தில் சிங்கள காடையர்களின் அட்டகாசம், வேடிக்கை பார்க்கும் காவல்துறை

இலங்கையின் வடமேல் மாகாணத்தில் சிங்கள கடையர்களினால் மேற்கொள்ளப்படும் வன்முறையால் முஸ்லிம்களின் சொத்துக்கள், உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால் உண்மையான சேதவிபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. துப்பாக்கிகளுடன் காவல்துறையினர் உள்ளபோதும், வன்முறையில் ஈடுபடுபடம் சிங்கள காடையர்கள், எதுவித பயமுமின்றி காடைத்தனத்தில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றபோதும், உறுதிப்படுத்த முடியவில்லை.

கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்கச் சொல்லி திருகோணமலையில் ஹர்த்தால்

கிழக்கு மாகாணம் திருகோணமலையில் இன்று (10/05) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.கிழக்கு மாகாண ஆளுநரை ஹிஸ்புல்லாவை பதவி நீக்கச் சொல்லி இந்த ஹர்த்தால் இடம்பெறுகிறது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மிக நெருங்கிய சகாவான ஹிஸ்புல்லா, இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார் என பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதும், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹிஸ்புல்லாவை பதவி நீக்கச் சொல்லி,...

ஹம்பாந்தோட்டையில் ஏழு இஸ்லாமிய தற்கொலைதாரிகள் கைது

காத்தன்குடியைச் சேர்ந்த ஏழு இஸ்லாமிய தற்கொலைதாரிகள் ஹம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் (06/05) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் எனவும், நீண்டகாலம் ஹம்பாந்தோட்டையில் இரகசியமாக பயிற்சிகளை மேற்கொண்டுவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.- Daily Mirror

தொடரும் மைத்திரியின் அராஜகம், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைநகலினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.பதவி நீக்கத்திற்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடமால், தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு தொலைநகல் மூலமாக அவசரமாக பதவி நீக்கியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா.இலங்கை தற்போது முகம்குடுத்துள்ள இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக தனது அதிகாரங்களை ஒழுங்காக பிரயோகிக்காத ஜனாதிபதி,...

நீர்கொழும்பில் குழு மோதல் வன்முறையாக வெடித்ததது. காவல்துறை ஊரடங்கு அமுலில்

நீர்கொழும்பில் நேற்று (05/04) இடம்பெற்ற குழு மோதல் வன்முறையாக மாறி, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது. நிலமையைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் மற்றும் விமானப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், நீர்கொழும்பு பிரதேசத்தில் காவல்துறை ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.தேவையற்ற வதந்திகள் பரவுவதைத் தடுக்க இலங்கையில் மீண்டும் சமூகவலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

200 இஸ்லாமிய மதபோதகர்கள் உட்பட 600 வெளிநாட்டவர்கள் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டனர்

இலங்கையிலிருந்து 600 வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என அமைச்சர் வஜிர அபேவர்தனா தெரிவித்துள்ளார். இவர்களில் 200 பேர் இஸ்லாமிய மதபோதகர்கள் ஆவர். இவர்களது விசா முடிவடைந்ததும் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி இருக்கவில்லை. எனவே இவர்கள் மீது தண்டப்பணம் அறவிடப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மத போதனை சம்பந்தமாக நாட்டுக்குள் வருபவர்களின் விசா...

பள்ளிவாசல்களில் வாள்களை எடுப்பவர்களால் ஏன் ஆவா குழுவிடம் எடுக்க முடியாமாலுள்ளது?

வாள்கள் மற்றும் கிரிஸ் ரக கத்திகள் வைத்திருப்பவர்கள் அவற்றை அருகிலுள்ள காவல் நிலையங்களில் இன்று (05/05) ஒப்படைக்குமாறு இலங்கை காவல்துறையினர் கேட்டுள்ளனர்.அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் படையினர் மற்றும் காவல்துறையினர் பல இடங்களில் வாள்கள் மற்றும் ஆயுதங்களை மீட்டு வருகின்றனர். இவற்றில் பழைய இரும்பிற்கு வேண்டப்பட்டிருந்த வெற்று தோட்டாக்கள் மற்றும் எறிகணைகளும்...

சரத் பொன்சேகாவை நியமிக்கக்கோரி ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலையைக் கருத்திற்கொண்டு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சட்ட ஒழுங்கு அமைச்சராக நியமிக்கக்கோரி, சில மூத்த அமைச்சர்கள் உட்பட ஐக்கிய தேசிய முன்னணியின் 59 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்க உள்ளனர்.ஆரம்பத்திலிருந்தே சரத் பொன்சேகாவின் நியமனத்தை மறுத்துவரும் ஜனாதிபதி, இம்முறையும் இந்த வேண்டுகோளை நிராகரிப்பார்...

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் இராணுவத்தால் கைது. 16ம் திகதிவரை விளக்கமறியல்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் M.திவாகரன் மற்றும் செயலாளர் S.கபில்ராஜ் ஆகியோர் நேற்று (03/05) இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கோப்பாய் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டனர். பின்னர் மாலை யாழ் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். நேற்று காலை யாழ் பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்த இராணுவம் மற்றும்...

விசாரணைகளில் அக்கறை காட்டாத இலங்கை ஜனாதிபதி

​இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்ய தன்னால் அமைக்கப்பட்ட மூவர் கொண்ட குழு, தமது இடைக்கால ​அறிக்கையை நேற்று முன்தினம் (30/04) தன்னிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி நேற்று (01/04) தெரிவித்தார்.இது தொடர்பாக ஜனைத்தபதி சட்டமா அதிபரை இன்று (02/04)சந்திக்கிறார். அதாவது இடைக்கால அறிக்கை கிடைத்து இரண்டு...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img