200 இஸ்லாமிய மதபோதகர்கள் உட்பட 600 வெளிநாட்டவர்கள் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டனர்

இலங்கையிலிருந்து 600 வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என அமைச்சர் வஜிர அபேவர்தனா தெரிவித்துள்ளார். இவர்களில் 200 பேர் இஸ்லாமிய மதபோதகர்கள் ஆவர்.

இவர்களது விசா முடிவடைந்ததும் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி இருக்கவில்லை. எனவே இவர்கள் மீது தண்டப்பணம் அறவிடப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மத போதனை சம்பந்தமாக நாட்டுக்குள் வருபவர்களின் விசா நடைமுறையில் இனி பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...